தமிழ்நாடு

பொறியியல் கல்லூரிகளில் ஆக.18 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்

28th Jul 2021 04:54 PM

ADVERTISEMENT

நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரி செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களில் 41,363 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கலந்தாய்விற்கான ரேண்டம் எண்களை ஆகஸ்ட் 25ம் தேதியும் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 4ம் தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்ககுழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப 48% பெற்றோர்களுக்கு விருப்பமில்லை: ஆய்வு 

ADVERTISEMENT

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என்றும் கூறியுள்ளது. 

இரண்டு, மூன்று, நான்காம் ஆண்டு பொறியில் படிக்கும் மாணவர்களுக்கு வருகிறார் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்கசிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

மேலும் நடப்பு செமஸ்டரின் கடைசி வேலை நாள் நவம்பர் 30 என்றும் டிசம்பர் 2ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் டிசம்பர் 13ம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Tags : Anna University பொறியியல் கல்லூரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT