தமிழ்நாடு

திருவாடானையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

28th Jul 2021 03:22 PM

ADVERTISEMENT

திருவாடானை: தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து திருவாடானையில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆணிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து புதன்கிழமை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக திருவாடானை ஓரியூர் முக்கு சந்திப்பு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு மாத உதவித்தொகை 1000 ரூபாய், மேலும் அதிமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதில் ஒன்றிய செயலாளர் மதிவாணன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ராமகிருஷ்ணன் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் செங்கை ராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK திமுக ADMK அதிமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT