தமிழ்நாடு

மேட்டுப்பாளையம்: திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

திமுக அரசை கண்டித்து மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும், கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்துள்ள ரூ.5 பவுன் நகை கடன் தள்ளுபடி என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வென்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

இதனை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை,  சிறுமுகை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடங்கி வைத்தார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ ஒ.கே.சின்னராஜ், மாவட்ட துணை செயலாளர் பி.டி.கந்தசாமி, காரமடை பேரூர் கழக செயலாளர் டி.டி. ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் ஜீவானந்தம், எம்.எஸ்.ராஜ்குமார், காரமடை ஊராட்சி ஒன்றியத்தலைவர் மணிமேகலை மகேந்திரன், ஊராட்சி ஒன்றிய  ஊராட்சித் தலைவர்கள ஞானசேகரன்(சிக்காாரம்பாளையம்), பூபதி (பெள்ளாதி) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட  500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT