தமிழ்நாடு

மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

28th Jul 2021 12:15 PM

ADVERTISEMENT

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான  நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை உள்பட திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவற்றை உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்ற வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சாலையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஏ.இப்ராகிம்  கலிலுல்லா தலைமை வகித்தார். 

இதில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் விஜி, நகர பொருளாளர் ஏகே பாபு, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ஷபீக் அகமது, சோமசுந்தரம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் அக்பர் பாஷா  உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். 
 

Tags : ADMK protest DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT