தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

28th Jul 2021 02:06 PM

ADVERTISEMENT


விருதுநகர்:  திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சட்ட பேரவை உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா தலைமையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, திமுக, ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் புதன்கிழமை தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்,  குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தரப்படும், நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்,  பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு  வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தேர்தலின் போது உறுதி அளித்தபடி திமுக பல அறிவிப்புகளை செயல்படுத்தவில்லை என்று கூறி திமுகவின் தேர்தல்  வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அதிமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான, ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

கரோனா  விதிகளின்படி தொண்டர்கள் கூட்டம் கூடாமல் அவரவர் வீட்டு வாசலிலேயே முழக்கமிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக கழகம் சார்பாக முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா தலைமையில் மாவட்டம் முழுவதும் அவரவர் வீடுகள் முன்பு திமுகவிற்கு எதிரான பதாகைகளை ஏந்தி புதன்கிழமை காலை அதிமுகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ADVERTISEMENT

இதில், வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்தையா, வழக்கறிஞர் ராஜா, ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் தைலாகுளம் மணி, விவசாய பிரிவு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் மல்லி.அய்யனார், தகவல் தொழிற்நுட்ப பிரிவு வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் வீராச்சாமி, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : protest ADMK சந்திரபிரபாமுத்தையா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT