தமிழ்நாடு

ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

28th Jul 2021 12:00 PM

ADVERTISEMENT


நீட் தோ்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் தரப்படும் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக ஆட்சியை கண்டித்து ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுக சேலம் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பேரவைத் தேர்தலின்போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன் நகர செயலாளர் அ.மோகன் கூட்டுறவு வங்கித்தலைவர்கள் ஆர்.வெங்கடேசன் ஈ.நூர்முகமது துரைசாமி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜி.முரளிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : ADMK Protest Protest அதிமுக ஆர்ப்பாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT