தமிழ்நாடு

தம்மம்பட்டி சிவன் கோவில் வளாகத்தில் 'சுக்ரீவ மதுவனம்' என்ற 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா

25th Jul 2021 02:04 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டியிலுள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில் சுக்ரீவ மதுவனம் என்ற பெயரிடப்பட்ட,  சுமார் 7 சென்ட் பரப்பளவில் மேசம், ரிசபம் உள்ளிட்ட 12 ராசிகளின் அஸ்வினி, பரணி, கார்த்திகை உள்ளிட்ட 27 நட்சத்திரங்களுக்குரிய ஆத்தி, பலா, கடம்பு, வில்வம், நாவல், செங்கருங்காலி, இலுப்பை உள்ளிட்ட 27 வகை மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் துவங்கி நடைபெற்றது.

முன்னதாக 27 மரக்கன்றுகளும் கோவிலுனுள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின் வேத மந்திரங்கள் ஓத, தேவாரம், திருவாசகம் பாட, ஊர் முக்கிய பிரமுகர்கள், கொடையாளர்கள், சிவனடியார்கள், பொதுமக்கள்  27 நட்சத்திர மரக்கன்றுகள் நட்டனர்.

ADVERTISEMENT

அதில் அபிசேக பால் மற்றும் நவதானிய நீர் ஊற்றப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 27 மரக்கன்றுகள் நன்கு வளர, நீர் பாய்ச்ச, அனைத்திற்கும் தண்ணீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த  27 மரக்கன்றுகள் நடப்பட்ட பகுதிக்கு தம்மம்பட்டியின் பண்டைய கால பெயரான 'சுக்ரீவ மதுவனம்' என்ற பெயரிடப்பட்டு அதற்கான பெயர்ப் பலகையும் திறக்கப்பட்டது.

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT