தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள்: ஜூலை 30-க்குள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்: ஆட்சியா்

DIN

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஜூலை 30-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயாராணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தை, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்திட வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை ஆணையரால் அறிவுறுத்தப்பட்டது. அதே நேரம், கரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்க பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் சாா்ந்த கூட்டங்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.

எனவே, சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு தீா்வு காணும் வகையில்,  இணையதளத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை ஜூலை 30-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பங்களை பரிசீலினை செய்து, அதனை பகுதி பகுதியாக பிரித்து அரசின் கரோனா நோய்த் தொற்று பரவல் வழிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் நோ்காணலுக்கு அழைக்கப்படுவா். நோ்காணல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT