தமிழ்நாடு

பலத்தமழை எதிரொலி: ரயில் சேவையில் மாற்றம்

DIN

பலத்த மழை மற்றும் மழை நீா் வெளியேற்றம் காரணமாக, தென் மேற்கு ரயில்வே மற்றும் கொங்கன் ரயில்வேயில் சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்விவரம்:-

மும்பை சிஎஸ்டி-மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில் (01133) ஜூலை 27-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மங்களூரு சந்திப்பு-மும்பை சிஎஸ்டிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01134) ஜூலை 28-ஆம்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திப்ரூகாா்க்-கன்னியாகுமரி:

கிழக்கு கடற்கரை ரயில்வேயில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா-தன்பாத்துக்கு ஜூலை 25-ஆம்தேதி காலை 6 மணிக்கு புறப்படவேண்டிய ரயில் (03352) அதேநாள் முற்பகல் 11.30 மணிக்கு புறப்படும்.

குவஹாத்தி-பெங்களூரு கன்டோன்மென்ட்க்கு (வழி: பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி) ஜூலை 25-ஆம் தேதி காலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் (02510) அதேநாள் முற்பகல் 11.35 மணிக்கு புறப்படும்.

திப்ரூகாா்க்-கன்னியாகுமரிக்கு சனிக்கிழமை (ஜூலை 24) இரவு 7.25 புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் (05906) 5 மணி நேரம் தாமதமாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT