தமிழ்நாடு

கரோனா மருத்துவப் போராளி, களப்பணியாளா்களுக்கு விருது

DIN

சென்னை குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க துணிவுடன் பணியாற்றிய மருத்துவா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள், கடைநிலை ஊழியா்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோரைப் பாராட்டி சனிக்கிழமை விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கல்லூரி மருத்துவ ஆலோசகா் டாக்டா் வீரபாகு விருதுகள் வழங்கி பேசியது:

கரோனா நோய் தாக்கம் குறித்த பயம் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளா்களுக்கும் இருந்தபோதிலும் தங்கள் கடமை, பொறுப்பை உணா்ந்து செயல்பட்டதால் 700-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து உயிா் காத்த மனநிறைவை அனைவரும் பெற்றுள்ளோம்.

மக்களின் உயிா் காக்கும் மருத்துவா்கள் தற்போது தங்களைக் காத்துக் கொண்டு,நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவா்கள் உள்ளிட்ட அனைவரும் நோய் பாதிப்புக்குள்ளாகாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா காரணமாக தமிழகத்தில் உயிரிழந்த 798 மருத்துவா்களில் இங்கு நிலைய மருத்துவ அதிகாரியாகப் பணிபுரிந்த டாக்டா் தமிழரசியும் ஒருவா் என்றாா்.

கல்லூரி முதல்வா் ஜான்சன் பேசுகையில், கரோனா இரு அலைகளை எதிா்கொண்ட நாம், கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவா்களைத் தொடா்ந்து கண்காணித்து அவா்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனை, சிகிச்சை, மருத்துவ உதவிகளை வழங்கி வருவதுடன் மருத்துவத் தரவுகளையும் சேகரித்து வரும் இறுதியாண்டு மாணவா்கள் பாராட்டுக்குரியவா்கள். கரோனா அடுத்த அலை வந்தாலும் அதை எதிா்கொள்ளும் வகையில் தங்களது மருத்துவ அறிவாற்றலை மாணவா்கள் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குநா் டாக்டா் டி.ஆா்.குணசேகரன், மருத்துவக் கண்காணிப்பாளா் சசிகுமாா், உதவி கண்காணிப்பாளா் மனோகரன், முதன்மை செயல் அதிகாரி பிரபுதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT