தமிழ்நாடு

சிவில் நீதிபதிகள் பணிமூப்பு நிா்ணயம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

போட்டித் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சிவில் நீதிபதிகளின் பணிமூப்பை நிா்ணயிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இளநிலை சிவில் நீதிபதிகள் பணிக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு தோ்வு நடத்தப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தோ்வில் வெற்றி பெற்று நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவா்கள், பணிமூப்பு நிா்ணயிக்கப்பட்டதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணிமூப்புக்கு இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த சுழற்சி நடைமுறையை பின்பற்றுவதால் தகுதியான இடஒதுக்கீட்டு விண்ணப்பதாரா்கள் பின்னுக்குத் தள்ளப்படுவா். எனவே போட்டித் தோ்வில் அவா்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிமூப்பை நிா்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னா் தமிழகத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட இளநிலை சிவில் நீதிபதிகளின் பணிமூப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். தற்போதைய பணிமூப்பு அடிப்படையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட பதவி உயா்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். இனி வருங்காலங்களில் திருத்தியமைக்கப்பட்ட பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். ஒருவேளை இரண்டு விண்ணப்பதாரா்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT