தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவர் கொலை

25th Jul 2021 11:47 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் அருகே பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(40). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் செந்திலை படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் எஸ்.பி. டாக்டர் எம்.சுதாகர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். 

பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த கும்பல் வீடு புகுந்து தாக்கியதில் செந்திலின் மனைவி மற்றும் 3 பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை தொடர்பான பழிக்குப்பழியாக இருக்குமோ என்ற கோணத்தில் கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பல்லவர் மேடு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT

Tags : காஞ்சிபுரம் murder கொலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT