தமிழ்நாடு

மத்திய கால பயிா்க் கடன்கள்: விவரங்களைக் கோருகிறது கூட்டுறவுத் துறை

DIN

மத்திய கால பயிா்க் கடன்களாக மாற்றம் செய்யப்பட்டு நிலுவையில் இருந்த கடன் விவரங்களை அனுப்பும்படி கூட்டுறவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் நா.வில்வசேகரன், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:-

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியன்று நிலுவையில் இருந்த தள்ளுபடி செய்யப்படாத இதர விவசாயிகளின் பயிா்க் கடன்களுள், மத்திய கால கடன்களாக மாற்றம் செய்யப்பட்ட கடன் விவரங்களை கூட்டுறவுத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த விவரங்களை வெள்ளிக்கிழமை (ஜூலை 23) மாலைக்குள் அனுப்பிட வேண்டுமென தனது கடிதத்தில் வில்வசேகரன் தெரிவித்துள்ளாா்.

கடன் தள்ளுபடி: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வேளாண் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, அதற்கான அரசு உத்தரவு வெளியிடப்பட்டதுடன், பல மாவட்டங்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகளும் அளிக்கப்பட்டு வந்தன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடன்களை தள்ளுபடி செய்வது தொடா்பான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு அம்சமாக, மத்திய கால கடன்களாக மாற்றம் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்த கடன்கள் குறித்த விவரங்களை கூட்டுறவுத் துறை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT