தமிழ்நாடு

தம்மம்பட்டியில் பாஜக பிரமுகர் பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்!

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில், தம்மம்பட்டி பாஜக பிரமுகர் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில், தடை செய்யப்பட்டுள்ள பான்பராக், குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் அதிரடி நடவடிக்கையை எடுக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் உத்தரவிட்டார். 

அதையடுத்து, மாநிலம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தம்மம்பட்டி போலீசார் நேற்று காலை, சோதனை நடத்தினர். அதில், பஸ்நிலையம் எதிரே கடை நடத்தி வரும் கந்தசாமி மகன் அருள் (46) என்பவர், தனது கடையில் 10 பாக்கெட் மட்டும் குட்கா, பான்பராக் வைத்திருந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 

பாஜக பிரமுகர் பிரகாஷ்

இந்நிலையில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில், எஸ்.ஐ. ராஜ்மோகன் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார், நேற்று  இரவு 10 மணிக்கு தம்மம்பட்டி நடுவீதியில் உள்ள பாஜக நகர வர்த்தக அணி செயலாளரான குல்லி (எ)  பிரகாஷ் என்பவருடைய  கடை, குடோன்களில்  அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, உடையார்பாளையம் இடுகாடு செல்லும் வழியில் தொடக்கப்பள்ளி எதிரே உள்ள கோபால் நாயக்கர் தோட்டத்தில், பிரகாஷ் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை டன் எடையுள்ள குட்கா, பான்பராக் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 

அதையடுத்து, பாஜக பிரமுகர் பிரகாஷை  நள்ளிரவு 1.30 மணிக்கு கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

பிரகாஷின் குட்கா பொருள்கள் அனைத்தும் நள்ளிரவு 12 மணிக்கு மேல், அதிகாலை 3 மணி வரை தனது கடையிலிருந்தும், பெரிய வியாபாரிகளுக்கு தம்மம்பட்டியிலிருந்து உப்பாத்துக்காடு செல்லும் வழியிலுள்ள மயானப் பகுதியில் நள்ளிரவு நேரத்திலும் விற்பனை செய்யப்பட்டதாகவும்,  தெரியாத நபர்களுக்கு குட்கா வியாபாரி பிரகாஷ் , குட்கா பொருள்களை தற்காப்பிற்காகவும், போலீசிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் விற்பனை செய்வதில்லை என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT