தமிழ்நாடு

தமிழகத்துக்கு 3.12 லட்சம் தடுப்பூசிகள் வருகை

DIN

தமிழகத்துக்கு மேலும் 3.12 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை வந்துள்ளன.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் அண்மையில் தொடங்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி செலுத்துவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறும், ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும் மத்திய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஜூலை மாதத்துக்கான மத்தியத் தொகுப்பிலிருந்து மேலும் 1.44 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை சென்னை வந்தன. அவற்றைப் பெற்றுக் கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். அதன் தொடா்ச்சியாக மேலும் 1.68 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய கிடங்குக்கு வந்தன. அவை கிடங்குக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT