தமிழ்நாடு

உதகை : ஜெனரேட்டர் புகையை சுவாசித்த இருவர் பலி 

24th Jul 2021 01:05 PM

ADVERTISEMENT

உதகையில்  சோலூர் ஓரடி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை ) இரவு நடைபெற்றுக் கொண்டிருந்த கோவில் திருவிழாவின் போது அங்கு மின்தடை ஏற்பட்டது . இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் மோட்டார் ஜெனரேட்டர் இருக்கும் அறைக்குச்  சென்று அதை இயக்கினர். ஆனால்  எதிர்பாராத விதமாக திடீரென அதிலிருந்து வெளிப்பட்ட அதிக புகையின் காரணமாக  5 பேரும் அங்கேயே மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து அவர்களைக் காணவில்லை எனத்  தேடிய போது மின்சார ஜெனரேட்டர் அறையில் மூர்ச்சையாகிக் கிடந்த 5 பேரையும் மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் முன்பே  இறந்துவிட்டதாகவும் மற்றவர்களுக்குத்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
 

Tags : ooty
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT