தமிழ்நாடு

யூடியூபர் மதன்கெளரிக்கு பதிலளித்த எலான் மஸ்க்

24th Jul 2021 03:25 PM

ADVERTISEMENT

இந்தியாவில் விரைவில் டெஸ்லா கார்களை அறிமுகப்படுத்தக் கோரிய பிரபல யூடியூபரான மதன்கெளரிக்கு அந்நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்பட்டு வருவது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம். இந்த நிறுவனம் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 

பல்வேறு நாடுகளில் தங்களது வாகனங்களை சந்தைப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்கள் தொடர்பாக அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

 

ADVERTISEMENT

இந்நிலையில் பிரபல யூடியூபரான மதன்கெளரி சுட்டுரைத் தளத்தில் டெஸ்லா நிறுவனத்தின் வாகனங்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரியிருந்தார். அவரது பதிவுக்கு பதிலளித்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் எலான் மஸ்க், “நாங்களும் இதனை செய்யவே விரும்புகிறோம். எனினும் உலகின் பெரிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இறக்குமதி வரிகள் அதிகம். மேலும், மின்சார வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போலவே கருதப்படுகின்றன. இது இந்திய சந்தைச் சூழலில் பொருந்தக்கூடியதாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Tesla elon musk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT