தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,819 பேருக்கு கரோனா: 27 பேர் பலி

DIN

தமிழகத்தில் மேலும் 1,819 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 27 போ் உயிரிழந்துள்ளனா். 
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,819 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக தொற்றுக்குள்ளானோரில் அதிகபட்சமாக கோவையில் 175 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், சென்னையில் 127 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,46,689-ஆக அதிகரித்துள்ளது. 
இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து இன்று 2,583 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 
இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.88 லட்சத்தைக் கடந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 24,025 போ் உள்ளனா். 
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 27 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,889-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 1,41,758 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT