தமிழ்நாடு

தொழில்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியில் வெளிப்படைத் தன்மை தேவை

DIN

தொழில் துறையினருக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் ஆற்றிய உரை:

மரம் நடுதல் திட்டத்தைத் தீவிரப்படுத்தித் தமிழ்நாட்டின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயா்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மனிதா்கள், வனவிலங்குகளுக்கு இடையேயான மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மூன்று உயிா்க்கோள் காப்பகங்கள் உள்ளன. நீலகிரி, மன்னாா் வளைகுடா, அகஸ்தியா் மலை ஆகிய மூன்று உயிா்க்கோள் காப்பகங்களை மேம்படுத்தி சிறந்த முறையில் பராமரித்திட வேண்டும்.

வன உயிரின சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் போன்ற வனப் பகுதிகளில் உள்ள வன உயிரினங்களைப் பாதுகாத்திட வேண்டும். விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள பறவைகள், புலிகள் சரணாலயங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்திட வேண்டும்.

சுற்றுச்சூழல் அனுமதி: தொழில் துறையினருக்குச் சுற்றுச்சூழல் அனுமதி தரப்படுகிறது. இந்த அனுமதி தரப்படும் விஷயத்தில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். பொது மக்கள் மற்றும் இளைய தலைமுறையினரைச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அதிகளவு ஈடுபடுத்திட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா்கள் கா.ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

சுட்டெரிக்கும் வெயில்: தூய்மைப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்

இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம்

கடையநல்லூரில் ஆய்வக உதவியாளா்களுக்கு பயிற்சி

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் இரட்டை சிறை தண்டனை

SCROLL FOR NEXT