தமிழ்நாடு

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

DIN

நிலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும்.

நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள்

தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT