தமிழ்நாடு

பி.ஏ.பி. விவசாயிகளைப் பாதிக்கும் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது: அமைச்சரிடம் விவசாயி சங்கத்தினர் மனு

DIN

திருப்பூர்: பி.ஏ.பி. விவசாயிகளைப் பாதிக்கும் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம் மூலம் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதேபோல் மறைமுகமாக 75 சதவீத அளவுக்கு விவசாய பூமிகளுக்கும் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர்தான் ஊர் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதரவாக திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போதுள்ள நிலைமையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஒரு சுற்று தண்ணீர் கிடைக்கிறது. இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால் திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதுடன், விவசாயம் அழிந்துவிடும்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக தவம் கிடைக்கும் நிலையில் ஆழியாறு அணையிலிருந்து 120 கி.மீ. தூரம் உள்ள ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல முயற்சிப்பதை விவசாயிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் ஏற்கனவே காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் வரதமாநதி, பொருப்பலாறு, பரப்பலாறு போன்ற நீர்தேக்கங்கள் உள்ளன. அதிலிருந்து குடிநீர்த் தேவைக்கு தண்ணீர் எடுக்கலாம். ஏற்கனவே நடைமுறையில் உள்ள காவிரி குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தலாம். இதைவிடுத்து தண்ணீருக்காக போராடிக்கொண்டிருக்கும் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் வயிற்றில் அடிப்பதுபோல இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தத் திட்டம்
செயல்படுத்தப்படுமானால் திருப்பூர், கோவை மாவட்ட விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஆகவே, இந்தத் திட்டம் செயல்படுத்துவதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT