தமிழ்நாடு

பெரியகுளம்: எல்ஐசி தனியார்மயமாக்கலை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

23rd Jul 2021 04:05 PM

ADVERTISEMENT

எல்ஐசி தனியார்மயமாக்கலை கண்டித்து பெரியகுளம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய அரசு எல்ஐசியின் பங்குகளை விற்கும் முடிவை கண்டித்தும் பொதுக்காப்பீட்டுத் துறை தனியார்மயம் மற்றும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும் இன்று பெரியகுளம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளையின்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சரவணகுமார் தலைமை வகித்தார்.  ஷீலா தேவி முன்னிலை வகித்தார். அகமது ஆதம் விளக்கவுரை நிகழ்த்தினார். 

ஆர்ப்பாட்டத்தில் முதல்நிலை அதிகாரிகள் சங்கம், தேசிய களப்பணியாளர்கள் கூட்டமைப்பு முகவர்கள் சங்கம், அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றனர்

ADVERTISEMENT

Tags : LIC privatization
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT