தமிழ்நாடு

அதிமுக மகளிரணி செயலராக பா.வளர்மதி நியமனம்

23rd Jul 2021 08:12 PM

ADVERTISEMENT

அதிமுகவின் மகளிரணி செயலாளராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கட்சி இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா. வளர்மதி, கட்சி கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் வைகைச்செல்வன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
அதேசமயம், கட்சி மகளிர் அணி செயலாளராக, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியும், இணை செயலாளராக, மரகதம் குமரவேல் எம்.எல்.ஏ.,வும் நியமிக்கப்படுகின்றனர். கட்சி இலக்கிய அணி செயலாளராக முனைவர் வைகைச்செல்வன், கட்சி வர்த்தக அணி நிர்வாகிகள் செயலாளராக வி.என்.பி., வெங்கட்ராமன், இணை செயலாளராக, ஏ.எம். ஆனந்தராஜா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Tags : admk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT