தமிழ்நாடு

+2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

DIN

12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு 23 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2020-2021-ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களுக்கு 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களிடமிருயதும், மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருயதும், 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத் தேர்வுக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பித்தல் தொடர்பான செய்திக்குறிப்பு மற்றும் 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுக் கால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

2020-2021-ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களுக்கு 19.07.2021 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் பன்னிரெண்டாம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட அரசாணையின் அடிப்படையில், 2020-2021-ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களுக்கு 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்கள், 23.07.2021 முதல் 27.07.2021 வரையிலான நாட்களில் (25.07.2021 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் வாயிலாக 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வினை எழுத விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்துப் பாடத்தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்தேர்வர்கள் குறிப்பிட்ட பாடத்தேர்வுகளை மட்டும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது.

மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வினை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

சிறப்பு அனுமதித் (தக்கல்) திட்டம்
23.07.2021 முதல் 27.07.2021 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் (தக்கல்) திட்டத்தில் 28.07.2021 அன்று ஆன்-லைனில் சேவைமையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். (சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000/-)

அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறியது கொள்ளலாம்.

மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறியது கொள்ளலாம்.

தேர்வுக்கால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுக் கால அட்டவணையின்படி, 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு நடைபெறும்.

பொதுவான அறிவுரைகள்:-
 தேர்வர்கள் 2021 துணைத் தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்க சேவை மையங்களுக்கு வரும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணியது வரவேண்டும்.

 போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT