தமிழ்நாடு

இசிஆர் சாலையில் அதிவேகத்தில் வந்த ரேஸ் பைக்குகள்: அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையினர்!

DIN

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் வந்த பந்தய மோட்டார் சைக்கிள்கள், கார்கள் வேகம் கணக்கிடும் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு அந்த வாகனங்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து அபராதம் விதித்தனர். 

மடக்கி பறிமுதல் செய்யப்பட்டு இருந்த அதிவேகத்தில் வந்த ரேஸ் பைக்குகள் 
மடக்கி பறிமுதல் செய்யப்பட்டு இருந்த அதிவேகத்தில் வந்த ரேஸ் பைக்குகள் 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தை சோதனை சாவடியில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயா(செங்கல்பட்டு), முரளி(திருக்கழுக்குன்றம்), ஆனந்தன்(மதுராந்தகம்) மற்றும் மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி, மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் சட்டம்-ஒழுங்கு போக்குவரத்து போலீசார் இணைந்து கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில் வேகம் கணக்கிடும் கருவி மூலம் அதிவேகத்தில் வரும் வாகனங்களை கண்காணித்து சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

இ.சி.ஆர். சாலையில் வாகனங்களின் வேகத்தை கணக்கிடும் கருவி மூலம் பயணித்த வாகனங்களின் வேகத்தை கண்காணித்த போக்குவரத்து ஆய்வாளர்கள்

அப்போது போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகத்தில் வந்த வாகனங்கள் வேகம் கணக்கிடும் கருவி மூலம் சிக்கின. இதில் விபத்தினை ஏற்படுத்தும் வகையில் அதிவேகத்தில் முகப்பு விளக்கு இல்லாமல் அதிக ஒலி எழுப்பி எந்த பந்தய மோட்டார் சைக்கிள்கள்(ரேஸ் பைக்குகள்) மற்றும் கார்கள் என 50 வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்களும், போக்குவரத்து போலீசாரும் மடக்கிப் பிடித்து வழக்குப்பதிவு செய்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களில் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விபத்தினை குறைக்கும் வகையில் குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, முகப்பு விளக்கு இல்லாமல் வரக்கூடாது, அதிக ஒலி எழுப்பி வாகனங்களை ஓட்டி வரக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT