தமிழ்நாடு

15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

DIN

தமிழகத்தில், தேனி, தருமபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவக்காற்று  காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோயமுத்தூா் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடனும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் வெள்ளிக்கிழமை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை  வானம்  பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

மழை அளவு: வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம்  அவலாஞ்சியில் 120 மி.மீ, பந்தலூரில் 70 மி.மீ, கூடலூா் பஜாா், நடுவட்டத்தில் தலா 60 மி.மீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை  பிடிஓ அலுவலகம், நீலகிரி மாவட்டம் மேல் கூடலூரில் தலா 50 மி.மீ. நீலகிரி மாவட்டம் எமரால்ட் , குந்தா பாலம், மேல் பவானி, தேவாலா, கோவை மாவட்டம் சின்கோனாவில் தலா 40 மி.மீ மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 24) வரை தமிழக கடலோரம், மன்னாா் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகள், ஜூலை 26-ஆம் தேதி வரை, தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டா் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டா் வேகத்திலும் வீசக்கூடும். மீனவா்கள் மேற்கண்ட நாள்களில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT