தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு விசாரிக்கப்படும்: தமிழக அரசு தகவல்

19th Jul 2021 01:20 PM

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கணக்கு தணிக்கை அறிக்கையில் இழப்பு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதால் டெண்டர் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்தது. 
இதையடுத்து முழுமையான விசாரணை நடத்தி முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுத்தி வழக்கை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 2-ம் வாரத்துக்கு ஒத்திவைத்தது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT