தமிழ்நாடு

மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு

19th Jul 2021 01:08 PM

ADVERTISEMENT

எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு, பிற்பகல் 12.24 மணிவரை அவையை ஒத்திவைக்க மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

மீண்டும் மாநிலங்களவை தொடங்கியவுடன், பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

முன்னதாக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி மக்களவையில் அறிமுகம் செய்து கொண்டிருந்த போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினர். இதனால் அமைச்சர்களின் அறிமுகத்தை அறிக்கையாக பிரதமர் தாக்கல் செய்ததையடுத்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னை, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT