தமிழ்நாடு

சசிகலாவால் ஒருபோதும் அதிமுகவை வீழ்த்த முடியாது: எடப்பாடி பழனிசாமி

19th Jul 2021 01:32 PM

ADVERTISEMENT

சசிகலாவால் ஒருபோதும் அதிமுகவை வீழ்த்த முடியாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் திமுக மக்களை ஏமாற்றி விட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது. 

மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதால் இதனை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும். 

ADVERTISEMENT

சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. அவர் அதிமுகவில் இருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. 

கரோனா தடுப்பூசிகளை நாங்கள் வீணடிக்கவில்லை. ஆரம்பத்தில் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததாலேயே தடுப்பூசிகள் வீணாகின என்றார். 

Tags : ADMK sasikala
ADVERTISEMENT
ADVERTISEMENT