தமிழ்நாடு

குடியரசுத் தலைவருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

19th Jul 2021 12:55 PM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை அவரின் மாளிகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.

இந்தச் சந்திப்பின்போது, 7 பேர் விடுதலை, நீட் விலக்கு, மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட தமிழக நலன் சாா்ந்த விஷயங்கள் குறித்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் முதல்வா் பேச வாய்ப்புள்ளது.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படத் திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு குடியரசுத் தலைவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அப்போது அழைப்பு விடுக்க உள்ளாா்.

முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக தில்லிக்கு பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலின், சில வாரங்களுக்கு முன்பு தில்லியில் பிரதமா் மோடியைச் சந்தித்து மேக்கேதாட்டு விவகாரம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT