தமிழ்நாடு

ஞாயிறு, விடுமுறை நாள்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

17th Jul 2021 11:31 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் ஜூலை 18 முதல் ஞாயிறு மற்றும் அரசுப் பொது விடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் மெட்ரோ ரயில் சேவைகள் ஜூலை 18 முதல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசுப் பொது விடுமுறை நாள்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

இதையும் படிக்கலாமே.. அடுத்த 100 நாள்கள் மிகவும் முக்கியமானவை: ஏன் தெரியுமா?

மெட்ரோ ரயில் சேவைகள் வார நாள்களில் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 

ADVERTISEMENT

Tags : metro train metro service
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT