தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி: குளத்தில் மூழ்கி பலியானோர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்

17th Jul 2021 01:00 PM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தில் மூழ்கி பலியான 5 பேர் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரண உதவி தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி கரும்புகுப்பம் பகுதியில் கடந்த புதன்கிழமை கோவில் குளத்தில் மூழ்கி பலியான 3 பள்ளி மாணவிகள் 2 பெண்கள் என 5 பேரின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5லட்சம் ரூபாயை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சனிக்கிழமை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலத்தில் வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கரும்புகுப்பம் சீதாம்பாள் தெருவை சேர்ந்த சிலர் அங்குள்ள அங்காளம்மன் கோவில் குளத்தில் துணி துவைக்க சென்ற அப்பகுதியை சேர்ந்த குணசேகரன் மகள் நர்மதா(12) குளத்தில் ஆழத்தில் சிக்கிய நிலையில் அவரைக் காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக சென்ற ராஜ் மனைவி சுமதி(35), அவரது மகள் அஸ்விதா(14), முனுசாமி மனைவி ஜோதி(38), தேவேந்திரன் மகள் ஜுவிதா(14) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக குளத்தின் உள்ளே மூழ்கி ஆழத்தில் சிக்கி இறந்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்,  வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன், டிஎஸ்பி ரித்து புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாறன் ஆறுதல் கூறி அந்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்திருந்தனர்.

இதையும் படிக்கலாமே.. வார இறுதியில் தி.நகர், பாடி, புரசைவாக்கம் செல்வோர் கவனத்துக்கு..

மேலும் இது குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குளத்தில் மூழ்கி இறந்த 5 பேருக்கும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் மேற்கண்ட 5 குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு  புதுகும்மிடிப்பூண்டி கரும்புகுப்பத்தில்  எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் வட்டாட்சியர் ந.மகேஷ்  வரவேற்றார். கோட்டாட்சியர் செல்வம், டிஎஸ்பி எஸ்.ரித்து, மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஷ்வரி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதா முத்துசாமி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், துணை தலைவர் எம்.எல்லப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் வி.எம்.எஸ்.சீனிவாசன், மதன்மோகன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று குளத்தில் மூழ்கி இறந்த 5பேரின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று முதல்வரின் பொது நிவாரணத்தில் இருந்து தலா 5லட்சம் ரூபாயை வழங்கி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தொடர்ந்து 5 பேர் மூழ்கி உயிரிழந்த குளத்தை தமிழக அமைச்சர் சா.மு.நாசர், ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பார்வையிட்டு குளத்தை சுற்றி சுற்றுசுவர் அமைக்க உத்தரவிட்டார்.

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், பொருப்பு குழு உறுப்பினர் எம்.எல்.ரவி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், திமுக நிர்வாகிகள் திருமலை, பாஸ்கரன், ரமேஷ்,அறிவழகன், இஸ்மாயில் ,மணிகண்டன், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

Tags : stalin relief TN CM Gummidipoondi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT