தமிழ்நாடு

மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

17th Jul 2021 01:42 PM

ADVERTISEMENT


 
நாகப்பட்டினம்: மேக்கேதாட்டுவில் காவியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை மற்றும்  கீழ்வேளூர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டவிதிகளுக்கு புறம்பாக மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கர்நாடக  மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு துணைபோகும் மத்திய அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகையை அடுத்த சிக்கல் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க நாகை ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்சங்க மாநிலப் பொதுச்செயலாளர் வி. அமிர்தலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பி.டி. பகு, விவசாயசங்க  ஒன்றியத் தலைவர் ஜி. முருகையன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச்செயலாளர் கே.செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் வி. ராதா ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதேபோல், கீழ்வேளூர் கடைவீதியில், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் முத்தையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசைக் கண்டித்து, நாகையை அடுத்த சிக்கலில் சனிக்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்.
 

Tags : nagai மேக்கேதாட்டு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT