தமிழ்நாடு

இன்று உங்கள் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புண்டா?

17th Jul 2021 01:17 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. வார இறுதியில் தி.நகர், பாடி, புரசைவாக்கம் செல்வோர் கவனத்துக்கு..

ADVERTISEMENT

ஜூலை 17: நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

ஏனைய வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் வரும் 5 நாள்களுக்கு கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. அடுத்த 100 நாள்கள் மிகவும் முக்கியமானவை: ஏன் தெரியுமா?

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக..
மதுராந்தகம், திருத்தணியில் தலா 9 செ.மீ. 
டிஜிபி அலுவலகம், சோழிங்கநல்லூர், செய்யார், திருத்தணி பிடிஓ, அம்பத்தூர், வில்லிவாக்கம் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 

Tags : rain IMD chennai rain heavy rain கனமழை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT