தமிழ்நாடு

போடி அருகே ஜான் பாண்டியன் கட்சி முன்னாள் நிர்வாகி கடத்தல்

17th Jul 2021 01:39 PM

ADVERTISEMENT

 

போடி: போடி அருகே வெள்ளிக்கிழமை இரவு மூன்றரை கோடி ரூபாய் கேட்டு ஜான் பாண்டியன் கட்சி முன்னாள் நிர்வாகியை கடத்திச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

போடி அருகே பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்தவர் கௌர்மோகன்தாஸ் (48). இவர் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவர் மீது மோசடி, போலியான துப்பாக்கிகள் வைத்திருந்தது, கலசம் மோசடி உள்ளிட்ட 8 வழக்குகள் இருந்த நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையே வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த இவரை சிலர் நான்கு சக்கர வாகனங்களில் வந்து கடத்திச் சென்றுள்ளனர். இவரது மனைவி ஜெயகிருஷ்ணலட்சுமி (45) போடி நகராட்சியில்  இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை பணி முடிந்து வந்த நிலையில் தனது கணவரை கடத்திச் சென்றது குறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

ADVERTISEMENT

அதன் பேரில் ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கௌர்மோகன்தாசை கடத்திச் சென்று வைத்திருக்கலாம் என்று வந்த தகவலையடுத்து காவலர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
 

Tags : Abduction
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT