தமிழ்நாடு

தமிழகத்திற்கு 3 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இன்று வருகை

17th Jul 2021 12:41 PM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை மாலை வர உள்ளன.

கரோனா தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் கடந்த சில நாள்களாக தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை மாநிலம் முழுவதும் 1.90 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில்  தமிழ்நாட்டிற்கு இன்று மாலை 3 லட்சம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி வர உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பூசிகள் மாவட்ட நிலைகளுக்கேற்ப கணக்கீடு செய்து பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

 

Tags : covishield coronavaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT