தமிழ்நாடு

தடுப்பூசி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம் 

15th Jul 2021 05:27 PM

ADVERTISEMENT

தடுப்பூசி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில், மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். தடுப்பூசி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : Marxist Communist
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT