தமிழ்நாடு

கம்பத்தில் காய்கனி வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி:  ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

13th Jul 2021 11:56 AM

ADVERTISEMENT


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் சாலையோர காய், கனி வியாபாரிகளுக்குத் தோட்டக்கலைத் துறை சார்பாக என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தள்ளுவண்டிகளை வழங்கினார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்  வட்டாரத்தில் உள்ள  காய்கனி வியாபாரிகளுக்கு  தள்ளுவண்டிகள்  வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் என்.ராமகிருஷ்ணன் எம்ஏ எம்எல்ஏ, 15 பயனாளிகளுக்கு ரூபாய் 15,000 மதிப்புள்ள தள்ளு வண்டிகளை வழங்கினார். நிகழ்வில்  வேளாண் தோட்டக்கலை உதவி இயக்குநர் சந்திரசேகரன், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும்  ஒன்றிய திமுக  பொறுப்பாளர் சூர்யா ப தங்கராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் குரு. இளங்கோ உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
 

Tags : theni mla
ADVERTISEMENT
ADVERTISEMENT