தமிழ்நாடு

நீட் தேர்வின் தாக்கம்: ஏ.கே.ராஜன் குழு நாளை(ஜூலை 14) அறிக்கை தாக்கல்

13th Jul 2021 05:08 PM

ADVERTISEMENT

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, நாளை தமிழக முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 89,342 பேர் நீட் தேர்விற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.  

இந்த கருத்துகளின் அடிப்படையில் பல கட்ட ஆலோசனைகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நடத்தியது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழுவினர் தங்களின் அறிக்கையை நாளை காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கவுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT