தமிழ்நாடு

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக எங்கெல்லாம் மழை பெய்யும்?

12th Jul 2021 03:58 PM

ADVERTISEMENT

சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா ஒட்டிய கடற்பகுதிகளில் நிலவுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 13ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

அதிகசட்பமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 7 செ.மீ. மழையும் சின்கோனா பகுதியில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT