தமிழ்நாடு

பெட்ரோல் விலை உயர்வு: கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸார் சைக்கிள் பேரணி

12th Jul 2021 03:06 PM

ADVERTISEMENT


கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாட்டு வண்டி கட்டி சைக்கிள் பேரணி திங்களன்று நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை மத்திய அரசு தடுக்க தவறியதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து மாட்டு வண்டி கட்டியும் சைக்கிள் பேரணியும் கும்மிடிப்பூண்டி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான ஏ.மதன்மோகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் எம்.சம்பத் பங்கேற்றார். மேலும் நிகழ்விற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.சிவாரெட்டி, வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் கே.அருண்பிரசாத், வட்டார தலைவர்கள் கும்மிடிப்பூண்டி மேற்கு எஸ்.எஸ்.பெரியசாமி, எல்லாபுரம் மேற்கு மூர்த்தி, பூண்டி ரஞ்சித்குமார், நகர தலைவர் குணசேகரன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் பெனிஷ், மாவட்டச் செயலாளர் கும்புளி மணி முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன முழக்கமிட்டனர். தொடர்ந்து மாட்டு வண்டி கட்டி அதில் ஏறிய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கண்டன கோஷம் எழுப்பியவாறு செல்ல, அவர்களை பின்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட சைக்கிளில் காங்கிரஸ் கட்சியினர்  கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்து கோட்டக்கரை  வழியே மேட்டுத் தெரு, கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகம் வழியே கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தை அடைந்தது.

ADVERTISEMENT

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் கும்மிடிப்பூண்டி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஏ.மதன்மோகன் , மாநில செயலாளர் எம்.சம்பத் கண்டன உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் வட்டார துணை தலைவர்கள் சசிகுமார், மகேஷ்வரன், மாவட்ட துணை தலைவர்கள் ஹேமகுமார், திவான் முகம்மது, அஸ்வின் ராஜ், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி பிரேம்குமார், போட்டோ செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT