தமிழ்நாடு

சங்ககிரியில் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி

12th Jul 2021 03:16 PM

ADVERTISEMENT


சங்ககிரி: சேலம் மாவட்டம், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் எரிபொருள்களின் விலையினை மத்திய அரசு திரும்பபெறக்கோரி சைக்கிள் பேரணியும், குதிரை வண்டிகள் பயணம் தொடக்க நிகழ்ச்சியும் சங்ககிரியில் திங்கள்கிழமை  நடைபெற்றது. 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகளை மத்திய அரசு  திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி  சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.ஜெய்க்குமார் தலைமையில் சங்ககிரி பயணியர் விடுதி சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல், டீசல் விற்பனையகம் வரை மிதிவண்டியில் பேரணியாக சென்றனர். 

முன்னதாக மாவட்டத்தலைவர் சங்ககிரி பழைய பேருந்து நிலைய வளாகம் அருகே  சங்ககிரியிலிருந்து சேலத்திற்கு குதிரை வண்டி பயணத்தை தொடக்கி வைத்துப் பேசினார். 

முன்னாள் மாவட்ட பொதுச்செயலர்கள் பிபி.சுப்பிரமணியன்,  முன்னாள் மாநில துணை செயலர் நடராஜ், முன்னாள் ராஜீவ்காந்திபஞ்சாயத்துராஜ் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.ராமமூர்த்தி,  நகரத்தலைவர் காசிலிங்கம், நகரச்செயலர் எ.ரவி, நிர்வாகிகள் அங்கமுத்து, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி விஸ்வநாதன், சின்னுசாமி மற்றும்  தேவூர்,  அரசிராமணி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT