தமிழ்நாடு

சென்னையில் செவ்வாயன்று மின்தடை  ஏற்படும் பகுதிகள்

12th Jul 2021 04:28 PM

ADVERTISEMENT


சென்னை: அவசர பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் செவ்வாய்கிழமை மின்தடை  ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 13ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

எழும்பூர் பகுதி : சைடனாமஸ் ரோடு ஒரு பகுதி, பி.டி முதலி தெரு, நாவல் மருத்துவமனை ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு ஒரு பகுதி, வேப்பேரி நெடுஞ்சாலை, ஜெனரல் காலின்ஸ் ரோடு, குறவன்குளம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், ஹண்டர்ஸ் ரோடு ஒரு பகுதி, ஆரணி முத்து தெரு, மாணிக்கம் தெரு பகுதி, கேசவபிள்ளை பார்க் ஹவுசிங் போர்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT