புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்பட 6 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை கடந்த ஜூன் 27 அன்று பதவியேற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட ஆறு அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில் முதல்வர் ரங்கசாமிக்கு கூட்டுறவுத்துறை, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் க.லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித்துறை, சுற்றலாத்துறை, விமானப் போக்குவரத்து, மீன்வளத்துறை, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, அச்சகம்.
தேனி சி.ஜெயக்குமார் - வேளாண், கால்நடைத்துறை, வனத்துறை, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்.
சந்திரபிரியங்கா - ஆதி திராவிடர் நலன், போக்குவரத்து, வீட்டுவசதித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் கலாசாரம்.
ஏ. நமச்சிவாயம் - உள்துறை, மின்சாரத்துறை, தொழில்கள் மற்றும் வர்த்தகம், கல்வித்துறை.
சாய் ஜெ. சரவணன்குமார் - நுகர்பொருள் வழங்கல், ஊரக வளர்ச்சித்துறை, சிறுபான்மையினர் நலன், சமூக மேம்பாடு, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.