முதல்வர் நிவாரண நிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரூ. 10 லட்சம் வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தார். அப்போது கரோனா நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கான மரியாதை நிமித்த சந்திப்பாகவே இது கூறப்படுகிறது.
சந்திப்பின்போது தேமுதிக துணைப் பொதுச்செயலர் எல்.கே. சுதீஷ், திமுக பொதுச்செயலர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலர் ஆ. ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ADVERTISEMENT