தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி பலி

7th Jul 2021 03:37 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் பாய்ந்து வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஆத்தெரத்தான் கொட்டாய் என்னுமிடத்தில் தனியார் கிரானைட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய கிருஷ்ணா ஜனா (35) என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். தொழிற்சாலையில் கிரானைட் கற்களை இயந்திரங்கள் மூலம் துண்டாக்கி  கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராமல் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு காவேரிப்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டிணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT