தமிழ்நாடு

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம்: முதல்வர் திறப்பு

7th Jul 2021 09:36 AM

ADVERTISEMENT

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பச்சிளங் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கான தனிக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பில் பேறுகால அவரச சிகிச்சை மையம் புதிதாக கட்டப்பட்டது.

இதில் 4 அறுவை சிகிச்சை மையம், 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தாய் - சேய் நலப்பிரிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள்பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். 

பின்னர் அதிக தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திருவாரூர் விளங்குவதால், ஆட்சியருக்கு விருது வழங்கி முதல்வர் அங்கீகரித்தார். 

ADVERTISEMENT

அஞ்சுகத்தம்மையார் நினைவிடத்தில் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ADVERTISEMENT
ADVERTISEMENT