தமிழ்நாடு

இடுக்கி பெரியாறு அணை பகுதிகளில் நிலநடுக்கம்

7th Jul 2021 12:22 PM

ADVERTISEMENT

கம்பம்: இடுக்கி அணை, பெரியாறு அணை பகுதிகளில் திங்கள்கிழமை இரவு நிலநடுக்கம் காணப்பட்டது.

தேனி மாவட்டம் அருகே உள்ளது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம். திங்கள்கிழமை பலத்த இடி மின்னல் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மக்கள் வசிக்கின்ற வீடுகளில் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இடுக்கி அணை பகுதியிலும் முல்லைப்  பெரியாறு அணை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இடுக்கி அணையில் நில அதிர்வை கணக்கிடும் சீஸ்மோகிராபி என்ற கருவியில் 2.5 ரிக்டேர் அளவு நில அதிர்வு ஏற்பட்டதாக அளவு காண்பிக்கப்பட்டது என்று இடுக்கி அணை பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையில் நில அதிர்வை கணக்கிடும் கருவி இல்லை அதே நேரத்தில்லும் நில அதிர்வு லேசாக ஏற்பட்டதாக அணைப் பகுதி பொறியாளர் தெரிவித்தார்.

இதுபற்றி குமுளியில் உள்ள வர்த்தக பிரமுகர் ஆனந்த் என்பவர் கூறுகையில்,

 நில அதிர்வு காணப்பட்ட நேரத்தில் பலத்த இடி மின்னல் ஏற்பட்டதால் நில அதிர்வை பெரும்பாலான பொதுமக்கள் உணரவில்லை என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT