தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 3,367 பேருக்கு கரோனா தொற்று

7th Jul 2021 07:36 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,367 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,06,848ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 64 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 33,196ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்றுக்குள்ளானோரில் அதிகபட்சமாக கோவையில் 385 பேருக்கும், ஈரோட்டில் 288 பேருக்கும், சேலத்தில் 214 பேருக்கும், தஞ்சாவூரில் 198 பேருக்கும், திருப்பூரில் 197 பேருக்கும், சென்னையில் 196பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் 3,704 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,39,576 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 34,076 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் 1,50,609 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT