தமிழ்நாடு

அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்: ஓபிஎஸ் அறிக்கை

7th Jul 2021 02:23 PM

ADVERTISEMENT

அதிமுக - பாஜக கூட்டணி தொடரும், இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார். அதற்கு பாஜக மாநில பொதுச்செயலர் கே.டி.ராகவன, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவால் தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டது என்று  பதில் அளித்திருந்தார். 

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடருமா என்று சர்ச்சை எழுந்தது.

அதிமுகவால் தான் பாஜகவுக்குத் தோல்வி: சி.வி.சண்முகத்துக்கு  ராகவன் பதில்

ADVERTISEMENT

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

படிக்க: அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா?: ஜெயக்குமார் விளக்கம்

'பாஜக மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை' என்று பதிவிட்டுள்ளார். 

Tags : OPS
ADVERTISEMENT
ADVERTISEMENT